மியான்மார் நிலநடுக்கம்; நிவாரண பொருட்களுடன் மியன்மாருக்கு பறந்த இந்திய விமானம்
மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் நேற்று அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்த நிலநடுக்கத்தில் மியான்மரில் 144 பேர், தாய்லாந்தில் 10 பேர் என மொத்தம் 154 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்துள்ள நிலையில் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளனர்.
இதனால், உயிரிழப்பு மேலும் அதிகாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, மீட்புப்பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
தற்காலிக கூடாரம், போர்வை, உணவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சூரிய ஒளி மின் விளக்கு, ஜெனரேட்டர், அடிப்படை மருந்துகள் உள்பட பல்வேறு நிவாரண பொருட்கள் ராணுவ விமானம் மூலம் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.