பாசிக்குடாவில் எனது உயிருக்கு ஆபத்து: பிரபல தமிழ் எழுத்தாளரின் பதிவால் எழுத்த சர்ச்சை
பாசிக்குடாவில் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் யாரேனும் நண்பர்கள் என்னை மட்டக்களப்பு வரை கூட்டிச் சென்று கொழும்புவுக்கு பஸ் எற்றி விட முடியுமா என பிரபல தமிழ் எழுத்தாளர் சாரு நிவேதிதா என்பவர் முகநூலில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விடயம் தற்போது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இது ஒரு விளையாட்டான விடயமல்ல. இவர் இங்கு வந்து இருந்து நம் பிரதேசத்தில் உயிர் அச்சுறுத்தல் என்று பதிவிடுவது சும்மா விட்டுவிட வேண்டிய ஒன்று அல்ல. இதை பொலிஸார் சரியாக விசாரிக்க வேண்டும் என மட்டக்களப்பை சேர்ந்த Ladchumiharan Yoganathan முகநூலில் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும், இவர் பற்றி சிலர் காமெடியாக பதிவுகள் இட்ட வேளை ஒரு வெளிநாட்டவர் அதுவும் ஒரு எழுத்தாளர் இங்கு வந்தவரை இவ்வாறு பேசுவதா என்று இருந்தது ஆனாலும் அவர் முகநூல் பதிவுகளை பார்க்கும் போது அப்படி போட இவரே தீனி போட்டுகொண்டு இருப்பது பார்க்க கூடியதாக உள்ளது.
இவர் போட்ட பதிவு இப்போ ஒரு செய்தியாக உருவெடுத்துள்ளது. இதை தீவிரமாக விசாரணை செய்து இவர் சரியான ஆதாரம் இல்லாமல் இப்படி பதிவிட்டிருந்தால் பகிரங்கமாக மறுப்பறிக்கை இவரால் இடப்படல் வேண்டும். என Ladchumiharan Yoganathan தெரிவித்துள்ளார்.