மக்களுக்கான போராட்டத்தின் போது 3 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த சோகம்! கண்ணீரில் குடும்பம்
எரிவாயுக்காக நேற்று முன்தினம் மாலை (01-06-2022) மூதூர் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் உள்ள வீதியில் மக்களுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருத்த நபரொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நெஞ்சுவலி ஏற்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன் தினம் மாலை 5.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மேலும், இவ்வாறு உயிரிழந்தவர் மூதூர் – ஜாயா நகரைச் சேர்ந்த 42 வயதான ஹபீப் முஹம்மது என்பது தெரியவந்துள்ளது.
அவரது ஜனாஸா நேற்று (02-06-2022) வியாழக்கிழமை மூதூர் முஸ்லீம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த நபரொருக்கு 4 மற்றும் 2 வயதுகளில் இரண்டு பெண் பிள்ளைகளும் 25 நாட்களான ஆண் குழந்தையொன்றும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது,
இப்றாஹீம் மக்களுக்காக போராடி உயிர் நீத்ததை பெரும் பேறாக கருதுவதாகவும், அவரது குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர்.