தினம் 5 வாதுமை பருப்பு சாப்பிட்டால் முதுமையை விரட்ட முடியும் என உங்களுக்கு தெரியுமா?
உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வாதுமை பருப்பு (Walnut), மூளைக்கு ஆற்றலை வழங்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும்.
குறிப்பாக, முதுமையை விரட்டி அடித்து, இளமையை தக்க வைத்துக் கொள்ள வாதுமை பருப்பு உதவும். இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது. அந்த வகையில் வாதுமை பருப்பின் நன்மைகள் என்னெவென்று நாம் இங்கு பார்ப்போம்.
மூளை கூர்மை
வாதுமை பருப்பு மூளையை கூர்மையாக்க பயனுள்ளதாக இருக்கும். இது மூளை உணவு என்று அழைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியம்
வாதுமை பருப்பில் உள்ள நல்ல கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானது. தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரும ஆரோக்கியம்
முதுமையை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வாதுமை பருப்பில் மறைந்துள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தை சுருக்கங்களில் இருந்து பாதுகாக்கிறது.
கூந்தல் ஆரோக்கியம்
முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை பெறவும் இந்த உலர் பழத்தை சாப்பிட வேண்டும். இது முடியின் வேர்களை வலுப்படுத்தும். இதனால் வழுக்கையையும் தடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
வாதுமை பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மேலும் தேனுடன் சாப்பிட்டால் ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை சீராக இருக்கும், நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள்.