கடுகு போட்டாத்தான் கலவரம் வெடிக்கும்; ப்ரமோவில் வறுக்கும் கமல்
சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 5-வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியின் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 3-ந் தேதி பிக்பாஸ் சீசன் 5-ன் முதல் ப்ரமோ வெளியிடப்பட்டது.
இந்த ப்ரமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், சீசன் 5 எப்போது தொடங்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் தற்போது பிக்பாஸ் சீசன் 5-ன் 2-வது ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. முதலில் கல்யாண வீட்டில் இருந்த கமல்ஹாசன் இப்போது சமையல் கலைஞராக மாறியுள்ளார்.
இதில் அடுப்பில் கடாய் வைக்கும் அவர் முதலில் பாத்திரம் காய வேண்டும். அப்புறம் எண்ணெய். அதுவரைக்கும் எல்லாம் அமைதியா இருக்கும், அதுல கொஞ்சம் கடுக போட்ட உடனே பொறிய ஆரம்பிக்கும் பாருங்க, சடசடனு பொறியும் சுறு சுறுனு வதங்கும்… சலசலனு கொதிக்கும், கருகருனு தீயும், பட்டுனு ஆவி அடிக்கும் சட்டுனு பொங்கும் தாளிச்சி கொட்டி இறக்கி வைக்கிற வரைக்கும் ஒரே கலவரம்தான் போங்க, என்று சொல்கிறார்.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இப்படி ஒரு ப்ரமோவை எதிர்பார்க்கவே இல்லை என பாராட்டி வருவதுடன் இந்த ப்ரமோ ரசிகர்கள மத்தியில் வைரலாகி வருகிறது.