ஆரம்பமான பேச்சு வார்த்தை; உடனடியாக வெளியேற வேண்டும்: வலியுறுத்திய உக்ரைன்
ரக்ஷ்யா - உக்ரைல் இடம்பெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நிலையில், பெலாரசின் கோமல் நகரில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை இடம்பெற்று வருகின்றது.
நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் வலியுறுத்தியுள்ளது. ரஷியா- உக்ரைன் போர் 5-வது நாளாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவின் அழைப்பை ஏற்று இன்று பேச்சு வார்த்தையில் உக்ரைன் பங்கேற்றுள்ளது.
முதலில் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்த உக்ரைன், வேறு சில இடங்களை பரிந்துரைத்து இருந்த நிலையில், தனது முடிவில் இருந்து சற்று பின் வாங்கி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.
இதனையடுத்து , பெலாரசில் உள்ள கோமல் நகரில் ரஷியா - உக்ரைன் பிரதிநிதிகள் இடையே பிற்பகல் 3.50 மணிக்கு ( இந்திய நேரப்படி) பேச்சுவார்த்தை தொடங்கியது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷியா உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்றும், ரஷிய படைகள் தமது நாட்டை விட்டு முழுமையாக வெளியேற வேண்டும் எனவும் உக்ரைன் வலியுறுத்தியுள்ளது.