காளான் காபி தூள்; அசத்தும் Reecha
Reecha இலங்கையில் வடபகுதில் அமைந்துள்ள மிகபெரிய பண்ணை என்பதுடன், பிரபல பொழுதுபோக்கு சுற்றுலா தலமாகவும் உள்ளது.
அதுமட்டுமல்லாதி இயற்கை முறை விவசாயம் , மற்றும் பல்வேறு உறபத்திகளையும் Reecha அறிமுகப்படுத்தி உள்ளதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றது.
புலம்பெயர் யாழ்ப்பாண தொழிலதிபரின் எண்ண கருவில் உருவான Reecha பண்ணை, இலங்கை வாழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது புலம்பெயர் மக்களிடமும் வெட்கு பிரபலம்.
காளானில் நிறைய மருத்துவ நன்மைகள்
காளானில் நிறைய மருத்துவ நன்மைகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் , Reecha இல் காளானை பயன்படுத்தி வத்தல்கள் மட்டுமல்லாது காளான் காபி தூளையும் தற்போது தயாரிக்கப்படுகின்றது.
காளான் காபி
வழக்கமான காபிக்கு ஆரோக்கியமான மாற்றாகப் பாராட்டப்படுகிறது, மருத்துவக் காளான் சாறுகள் மற்றும் கூடுதல் சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது.
இது தற்போது பிரபலமான காபி கலவையாக இருந்தாலும், இந்தக் கருத்து புதியதல்ல. இரண்டாம் உலகப் போரின் போது, காபி கொட்டைகள் கிடைக்காதபோது, பின்லாந்தில் காபிக்கு மாற்றாக காளான்கள் பயன்படுத்தப்பட்டன.
ஆசிய நாடுகளில், குறிப்பாக சீன மருத்துவத்தில், அவற்றின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நன்மைகளுக்காக காளான்களை சமையல் மற்றும் மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தியதற்கான விரிவான வரலாறும் உள்ளது.