இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ள முஷர்ரப்
தலைவரின் கைதறிக்கையிலும் இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ள முஷர்ரப், யார் என்பதை அ.இ.ம.காவின் ஆதரவாளர்கள் அறிந்துகொள்ளுமாறு சம்மாந்துறை வாசியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் குறித்த நபர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
பா.உறுப்பினர் முஷர்ரப், தனது கட்சித் தலைவரின் கைதுக்கு வெளியிட்டுள்ள எதிர்ப்பு அறிக்கையாக, இதனை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்வதை அவதானிக்க முடிகிறது. இவ் அறிக்கையானது, அ.இ.ம.கா தலைவர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கான அறிக்கையா என்பதை தேடி கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இவர் தானா, தலைவர் மீது எய்யப்படும் அம்புகளுக்கு, தனது நெஞ்சை கொடுக்க வந்தவர்.
அ.இ.ம.காவின் அரசியல் எதிரிகள் கூட இதனை விட அழகான, கனமான அறிக்கைகளை பதிவிட்டுள்ளனர். பா.உறுப்பினர் முஷர்ரபின் அறிக்கை எப்படி கனதியாக இருந்திருக்க வேண்டும் ? பா.உறுப்பினர் முஷர்ரபை ஆதரிக்கும் ஒரு உண்மையான அ.இ.ம.கா ஆதரவாளன், தனது பா.உறுப்பினர் முஷர்ரபுக்கான ஆதரவை மீள் பரிசோதனை செய்ய இது போதுமானதாகும்.
எதிர்ப்பறிக்கையை வைத்து எதனை சாதிப்பது " என பா.உறுப்பினர் முஷர்ரபின் ஆதரவாளர்கள் கேட்க தயங்க மாட்டார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். அவ்வாறே அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார்கள்.
அவ்வாறானால் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் இந்த எதிர்ப்பு பதிவு எதற்காக? அ.இ.ம.காவின் தலைவரின் கைதில் கூட இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ள பா.உறுப்பினரின் முஷர்ரபின் செயலை, எவ்வாறு விமர்சிப்பது என தெரியவில்லை. அ.இ.ம.கா தலைவரை அனைவரினதும் ஒத்துழைப்போடு தான் மீட்க வேண்டும் என்பதை, அவரை உண்மையாக நேசிக்கும் நான் அறியாதவனல்ல.
இந் நேரத்தில் அரசியல் நோக்கில் பதிவிட, நான் ஒன்றும் வக்கிர சிந்தனையாளனுமல்ல. இருந்தும் இந்த இரட்டை முகம் மக்கள் முன் கிழித்தெறியப்பட வேண்டும் எனும் நோக்கில் இதனை பகிர்கிறேன் என சம்மாந்துறையை சேர்ந்த குறித்த நபர் பதிவிட்டுள்ளார்.