சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பழத்தோல்கள் ; இத மட்டும் தூக்கி போடாதீங்க
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ஒருவருக்கு ஒரு முறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதன் பிறகு அதை முற்றிலுமாக்க குணப்படுத்த முடியாது.
எனினும் ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கைமுறை மற்றும் மருந்துகள் மூலம் இதை கட்டுக்குள் வைக்கலாம். நீரிழிவு நோய் இருக்கும் நபர்களுக்கு சோர்வு, பார்வை மங்கலாகுதல், எடை இழப்பு, பசி இழப்பு போன்ற பல அறிகுறிகள் ஏற்படும். சில எளிய, இயற்கையான வழிகளில் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் பழத்தோல்கள்
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உங்கள் தினசரி உணவில் பல விஷயங்களைச் சேர்க்கலாம். நீரிழிவு நோயைக் குறைப்பதில் பல வகையான பழங்கள் மிகவும் உதவியாக இருக்கும். இருப்பினும், பல பழங்களின் தோல்களைக் கொண்டும் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்.
மாம்பழத்தோல் (Mango Peel): மாம்பழம் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. ஆகையால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும், மாம்பழத் தோலை உட்கொள்வது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
ஆப்பிள் தோல் (Apple Peel): நீரிழிவு நோயாளிகளுக்கு ஆப்பிள் மட்டுமல்ல, அதன் தோலும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
கிவி தோல் (Kiwi Peel): கிவி பழத்தின் தோல் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஈ காணப்படுகிறது. சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, கிவி பழத்தோலை சாப்பிடலாம்.
வாழைப்பழத் தோல் (Banana Peel): நீரிழிவு நோயாளிகளுக்கு வாழைப்பழத் தோலை உட்கொள்வது நன்மை பயக்கும். வாழைப்பழத் தோலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் நார்ச்சத்து உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
பீச் பழத்தோல் (Peach Peel): பீச்சில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. நீரிழிவு நோயாளிகளுக்கு பீச் பழத்தோலை உட்கொள்வதும் நல்லது. இதன் தோலில் பல ஆரோக்கிய பண்புகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ உள்ளது.
