தமிழர் பகுதியில் வன்முறை கொலை ; சிசிடிவி காட்சியால் பரபரப்பான விசாரணை
திருகோணமலை, உப்பு வெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட 3ஆம் கட்டை சந்தியில் நேற்றிரவு, ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
திருகோணமலை, உப்பு வெளிப் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன் விளைவாக, 33 வயதுடைய நபர் ஒருவர் 3ஆம் கட்டை சந்தியில் வைத்து, அதிகாலை 3 மணியளவில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக, சிசிடிவி காணொளி மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில், உப்பு வெளி காவல்துறையினரால் ஒருவரும், திருகோணமலை தலைமையகக் காவல்துறையினரால் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளது வருகின்றனர்.