இலங்கையில் தகாத உறவால் கொடூரம் ; கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு சம்பவம் செய்த மனைவி
மஹியங்கனைப் பொலிஸாரால் கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும், பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை, சங்கபோபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான ஒருவர் காணாமல் போனதாக கடந்த ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி மஹியங்கனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தகாத உறவு
இந்த முறைப்பாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவரது மோட்டார் சைக்கிள் ஒக்டோபர் 21ஆம் திகதி வியன்னா ஆற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.
அதேபோல், அவரது சடலம் மூன்று நாட்களுக்குப் பின்னர், அதாவது கடந்த 24ஆம் திகதி, கிராந்துருகோட்டை, உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது.
இது சந்தேகத்திற்கிடமான மரணமாக இருந்ததால், பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று (19) ஒரு நபர் மஹியங்கனைப் பொலிஸ் நிலையத்திற்கு வந்து குறித்த மரணம் ஒரு மனிதக் கொலை என்று கூறியுள்ளார்.
அவர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், இறந்தவரின் மனைவி மற்றும் தனக்கு இடையில் இருந்த தவறான உறவுக்கு இறந்தவர் தடையாக இருந்ததால், இறந்தவரின் மனைவியின் சம்மதத்துடன் தான் மற்றொருவருடன் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன்படி, அந்த நபரும் இறந்தவரின் மனைவியும் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சங்போபுர பிரதேசத்தைச் சேர்ந்த கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 55 வயதுடையவர் எனவும், கைது செய்யப்பட்ட பெண் 42 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மற்றைய சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மஹியங்கனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.