பேலியகோட பகுதியில் இடம்பெற்ற கொடூர சம்பவம்: ஒருவர் பரிதாபமாக பலி
பேலியகொட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பேலியகொட நகரம் பொலிஸ் பிரிவிலுள்ள இறைச்சி விற்பனை நிலையத்திற்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மீகஹாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவரே கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (04) சனிக்கிழமை பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42 மற்றும் 45 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பேலியகொட பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.