ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றியை சுவீகரித்த மும்பை இந்தியன்ஸ் அணி
18ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றிரவு ஜெய்ப்பூரில் நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் அணி கிட்டத்தட்ட அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்து விட்டது.
இன்றைய போட்டியில் தோல்வியை சந்தித்தால் ராஜஸ்தான் அணி அதிகாரபூர்வமாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். இப்போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை பெற்று ராஜஸ்தான் அணிக்கு 218 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 16 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது