100 ஆண்டுகள் கழித்து நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
ஜோதிடத்தின் படி, 2026 ஆம் ஆண்டின் நவராத்திரி மிகவும் மங்களகரமானது. துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடக்கூடிய நவராத்திரியானது அக்டோபர் 11 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 19 ஆம் திகதி முடிவடைகிறது. கடைசியாக பத்தாம் நாளான அக்டோபர் 20 ஆம் திகதி விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது.

அதுவும் இந்த நவராத்திரி காலத்தில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும், புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகமும், சந்திரன் மற்றும் குருவின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகமும் உருவாகின்றன.
இப்படி பல ராஜயோகங்கள் நவராத்திரியில் நிகழ்வது அரிது. இதன் விளைவாக சில ராசிக்காரர்களுக்கு நவராத்திரியானது மிகவும் அதிர்ஷ்டமானதாக, ஒவ்வொரு வேலையிலும் வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கப் போகிறது. இப்போது நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் மேஷ ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். வேலையில் உள்ள தடைகளை அனைத்தும் நீங்கும். தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலதிபர்களுக்கு இக்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.

சிம்மம்
நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் சிம்ம ராசிக்காரர்கள் துர்கா தேவியின் சிறப்பு ஆசியைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். முதலீடுகளை செய்ய நினைத்தால், இக்காலம் மிகவும் ஏற்றதாக இருக்கும்.

கடகம்
நவராத்திரியில் உருவாகும் பல ராஜயோகங்களால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்கும். இந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
