சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்ற அர்ச்சுனா எம்.பி
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூர்ந்து சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், இந்திய சட்டமன்ற உறுப்பினருமான தொல்காப்பியன் திருமாவளவன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இவர்களுடன் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் , பொதுமக்கள், என பல நூறு பேர் நினைவேந்தல் நிகழ்வில் உணர்வெழிச்சியுடன் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வில் நினவுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியரசு , பாலாஜி, அர்ச்சுனா இராமநாதன், சண் மாஸ்டர் உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.
இறுதியாக வி.சி.க கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரையாற்றியுள்ளார்.