முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியீடு!
கடந்த 2009ம் ஆண்டு சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகத் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழர் தாயகப் பரப்பிலும், புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றது.
பிரதான நினைவேந்தல் இறுதிப் போரின் சுவடுகளை தாங்கியுள்ள முள்ளிவாய்க்காலில் இன்று இடம்பெற்றது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14ஆவது ஆண்டு நினைவேந்தலின் 'முள்ளிவாய்க்கால் பிரகடனம்' வெளியிடப்பட்டது. குறித்த முள்ளிவாய்க்கால் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ சற்றுமுன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி இடம்பெற்று வருகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்த நிகழ்வில் போரில் 14 உறவுகளை இழந்த, மன்னாரைச் சேர்ந்த கொன்சியூலஸ் வினிதா எனும் தாயொருவரால் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.