ஜூன் மாதத்திற்குள் முல்லைத்தீவு காணி விடுவிப்பு
முல்லைத்தீவு தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வரும் ஜூன் மாதத்திற்குள் விடுவிக்க இராணுவம் உறுதியளித்துள்ளதாக வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கெளஷல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு தபால் நிலையம் தற்போது ஒரு தனியார் கட்டடத்தில் வாடகை அடிப்படையில் இயங்கி வருவதாக அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

குறித்த தபால் நிலையத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியில் தற்போது இராணுவத்தின் 23-வது படைப்பிரிவு நிலை கொண்டுள்ள நிலையில், அதனை 2026 ஜூன் மாதத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் வாய்மொழி மூலமான உறுதியை வழங்கியுள்ளது.
வடக்கில் விடுவிக்கப்படவுள்ள காணிகள்; மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஜனாதிபதியின் முக்கிய அறிவிப்பு
இந்தக் காணியை முறையாக தபால் திணைக்களத்திடம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காணி விடுவிக்கப்பட்ட பின்னர், 2027-ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிய தபால் நிலையக் கட்டடத்தை நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.