மூன்றாவது நாளாகவும் முடங்கிய முல்லைத்தீவு!
முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவில் விலகிய நிலையில் ,நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்ட நிலையில் மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்கின்றது.
அதற்கமைய முல்லைத்தீவில் திங்கட்கிழமை (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் புதன்கிழமை (04) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இன்று புதன்கிழமை (04) முல்லைத்தீவு நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற அதே வேளையிலே திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறுகின்ற மாங்குளம் நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகளும் புதன்கிழமை (04) நடைபெறுகின்ற நிலையில் இரண்டு நீதிமன்றங்களுக்கும் சட்டத்தரணிகளின் எவரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.