யாழில் முன்னெடுக்கவுள்ள பாரிய போராட்டம்: தமிழ் தேசிய கட்சிகள் அதிரடி தீர்மானம்!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (29-09-2023) இலங்கைத் தமிழரசுக் கட்சி ரெலோ புளொட் ஈ. பி.ஆர் .எல் .எவ் .தமிழ் தேசிய கட்சி உள்ளிட்ட பிரதிநிதிகள் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
யாழில் இடம்பெறவுள்ள போராட்டம்
இதன்படி, யாழில் எதிர்வரும் 4ஆம் திகதி மிக பெருமளவில் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மருதனார் மடத்தில் இருந்து யாழ் நகர் வரை மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
பின்னர் முல்லைத்தீவை முடக்கி போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இதற்கான திகதி இதுவரை அறிவிக்கபபடவில்லை. மேலும், ஜ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு இவ் விடயம் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது.
இதுதொடர்பான செய்திகள்
நீதிபதி உயிருக்கு அச்சுறுத்தல்: யாழில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் தேசியக் கட்சிகள்!