நீதிபதி உயிருக்கு அச்சுறுத்தல்: யாழில் திடீரென ஒன்றுகூடிய தமிழ் தேசியக் கட்சிகள்!
உயிர் அச்சுறுத்தல் காரணமாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக முக்கிய தீர்மானத்தை எடுப்பதற்காக தமிழ் தேசியக் கட்சிகள் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தற்போது ஒன்றுகூடியுள்ளனர்.
தமிழ் நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திரமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் தமிழர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என பலராலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுவரும் நிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது.
இந்தக் கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், எம். ஏ சுமந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் க.பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சட்டத்தரணி சிறீகாந்தா, வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவிகே சிவஞானம், மற்றும் வடக்கு மாகாணாசபை முன்னாள் உறுப்பினர்கள், மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.