திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; சம்பவ இடத்துக்கு சென்று சிக்கலில் மாட்டிய எம்.பி
திருகோணமலை - கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற நேற்று (16) இரவு பொலிஸார் நடவடிக்கை எடுத்ததை அடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று மீண்டும் சிலை நிறுவப்பட்டதன் பின் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமனவுக்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பெரும் பரபரப்பு
ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விஹாரையில் நிறுவப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்ற நேற்று (16) இரவு பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
புத்தர் சிலை சேதமடையும் என்ற தகவலைத் தொடர்ந்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்ததாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர் அகற்றப்பட்ட புத்தர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ பொலிஸ் இன்று (17) நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து பௌத்த தேரர்கள் இணைந்து பிரித் ஓதி வழிபாடுகளில் ஈடுபட்டு சிலையை நிறுவினர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமனவுக்கு அங்கு கூடியிருந்த கூட்டத்தினரின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இப்பகுதியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.