இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை
தன்னை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதாக அர்ச்சுனா நேற்றையதினம் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவரின் இருக்கையில் அமர்ந்த அர்ச்சுனா, 'தமிழீழ மக்களுக்கு வணக்கம்' என்று விழித்திருந்தார்.
இந்நிலையில் அர்ச்சுனா எம்.பி , தமிழீழம் என்ற சொல்லை பயன்படுத்தியமை தொடர்பில் விளக்கமளிப்பதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.