அடுத்த 5 ஆண்டுகளுக்கு அருச்சுனா எம்பி நாடாளுமன்றத்திற்கு பெரும் தலைவலி!
இலங்கையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் - அர்சுனாவால் நாடாளுமன்றம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் சட்டவிரோதமான செயலைச் செய்தால், அவருக்கு எதிராக நாட்டின் சட்டங்களை எந்த சந்தேகமும் இல்லாமல் அமல்படுத்த முடியும்.
ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதால் ,ஐந்து வருடங்களுக்கு நாடாளுமன்றம் அவரைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அமைச்சரவை பேச்சாள்ர் கூறினார்.
அருச்சுனா ஒரு பெரிய பிரச்சனை
இன்றைய அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நேற்று இரவு, போக்குவரத்து விதிகளை மீறி, வண்ணமயமான விளக்குகளை எரியவிட்டு வாகனம் ஓட்டிச் சென்ற ராமநாதன் அர்ச்சுனாவை, சோதனை செய்வதற்காக தடுத்து நிறுத்தியபோது, போக்குவரத்து பணியில் இருந்த இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் ராமநாதன் அர்ச்சுனா தகராறு செய்துள்ளார்.
போலீசார் கேட்டபோது , அவரது ஓட்டுநர் உரிமத்தை வழங்க மறுத்த அர்ச்சுனா,அவர்களை மோசமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியின் தொலைபேசியில் அவை பதிவாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கிய அனுராதபுரம் காவல்துறை, தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 183 மற்றும் 344 மீறல் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சந்தேக நபரைக் கைது செய்ய நடவடிக்கை
தற்போதுள்ள சட்ட விதிகளின்படி மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், சந்தேக நபரைக் கைது செய்ய மேலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், விசாரணையின் முன்னேற்றம் குறித்து பிப்ரவரி 3 ஆம் திகதி நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டால், அவருக்கு எதிராக சட்டம் பிரயோகிக்கப்படும். நாடாளுமன்றத்தில் அவரது நடத்தை குறித்து நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. எம்.பி. அர்ஜுனனுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுகளும் உள்ளன. இது தொடர்பாக இன்று ஒரு நாடாளுமன்றக் குழு கூடியது.
அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்றத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக்களை அமைக்கலாம். சிறப்புரிமைக் குழுக்களை அமைக்கலாம்.
ஆனால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.