மயிலால் வந்த மரணம் ; 18 வயது இளைஞருக்கு நேர்ந்த கதி
ஹெட்டிபொல – வஸ்கமுவ வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று மயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 18 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென மயிலுடன் மோதியுள்ளது.

மேலதிக விசாரணை
இதனால் வேகம் மற்றும் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரமொன்றில் மோதி தடம் புரண்டுள்ளது.
இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹந்துன்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.