நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: ஒருவர் பலி
அநுராதபுரம் , ஹித்தோகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜனஹித்த சந்திக்கு அருகில் சனிக்கிழமை (07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹித்தோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் வலது புறமாக திரும்ப முயன்ற போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிள்களின் இரு செலுத்துனர்களும் பின்புறத்தில் அமர்ந்திருந்த நபரொருவரும் படுகாயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இசுருபுர, விஜயமாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹித்தோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.