மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்து ; பறிபோன உயிர்
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியில் தெலவ பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கல்கமுவ பகுதியிலிருந்து அம்பன்பொல நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர் அசோக புரத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஆவார். இந்த சம்பவம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.