இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
வெல்லவாய - அம்பாந்தொட்டை வீதியில் வீரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்த பகுதியில், வீரவிலயிலிருந்து பன்னேகமுவ நோக்கி சென்ற மோட்டார் சைக்கில் ஒன்று முன்னால் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
நால்வர் படுகாயம்
இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நால்வரும் காயமடைந்து தெபரவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வெலிமடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
சடலம் தெபரவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.