பவுசர் ஒன்றில் மோதுண்ட மோட்டார் சைக்கிள்; நேர்ந்த சோகம்
நுவரெலியா -உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் ஹவாஎளிய பெண்கள் உயர்நிலை சிங்கள பாடசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இராகலை பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று, ஹாவாஎளிய பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் பவுசர் ஒன்றின் பின் பகுதியில் மோதுண்டு இந்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நுவரெலியா தர்மபாலபுர, ரூவான் எளியவை சேர்ந்த டி.எம்.எஸ்.குமார திஸாநாயக்க சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் பவுசர் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
