ஜனக்க ரத்நாயக்காவை பதவிலிருந்து நீக்க பிரேரணை!
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பிலான பிரேரணை நாடாளுமன்றத்தில் நாளை (24-05-2023) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை, உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தனக்கு ஆதரவாக நாளை செயற்படுவார்கள் என நம்புவதாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஜனக்க ரத்நாயக்க கூறினார்.
மேலும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிரான பிரேரணைக்கு ஆளுங்கட்சியில் பெரும்பான்மையாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு கிடைக்கும் என முன்னாள் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே Gamini Lokuge தெரிவித்தார்.
பிரேரணைக்கு எதிராக தாம் வாக்களிக்கப்போவதாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் பொது எதிரணியாக செயற்படும் சுதந்திர மக்கள் கூட்டணியும் பிரேரணைக்கு எதிராக தாம் வாக்களிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி மேலவை இலங்கை கூட்டமைப்பாக செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச Wimal Weerawansa தலைமையிலான தரப்பினரும் இந்த பிரேரணைக்கு இணங்கப்போவதில்லை என இன்று அறிவித்தனர்.