கொழும்பில் பிரசவ வேதனையில் துடித்த தாய்! வைத்தியருக்கு ஏற்பட்ட நிலை
குழந்தையை பிரசவித்த தாய் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில், வைத்தியர் எரிபொருள் வரிசையில் காதிருந்த அவலநிலை இலங்கையில் தோன்றியுள்ளது.
இது இலங்கையின் கிராமமொன்றில் இடம்பெறவில்லை. நுகேகொடயில் இடம்பெற்றதாக மருத்துவர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், குழந்தையை பிரசவித்த பின்னர் தாய்க்கு குருதிபெருக்கு ஏற்பட்டிருந்தது,மருத்துவர் எரிபொருளை பெறுவதற்கான வரிசையில் நின்றிருந்தார்.
முச்சக்கரவண்டி கூட அவர் மருத்துவமனிக்கு வருவதற்கு கிடைக்கவில்லை,எரிபொருள் வரிசையில் நின்ற மருத்துவரை கூட்டி வருவதற்காக வாகனங்களை அனுப்புவதற்கு பொலிஸார் முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நாட்டில் மக்கள் படும் இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு எனவும் அந்த மருத்துவர் கேள்வியெழுப்பியுள்ளார்.