வவுனியாவில் மகனுடன் சென்று மாயமான தாய் ; உதவி கோரும் பொலிஸார்
வவுனியா, சமளங்குளம் பகுதியில் வசித்து வந்த தெய்வானை என்ற பெண் நேற்று முதல் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் நேற்று மாலை தனது மகனுடன் வீட்டிலிருந்து கிளிநொச்சி செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்திற்குச் சென்றுள்ளார்.

தகவல்
அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளதாகவும், அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவரது மகன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
காணாமல் போன பெண்மணியைத் தேடி வரும் குடும்பத்தினர், புகைப்படத்தில் உள்ள பெண்மணியை யாராவது கண்டால் உடனடியாக 0776305405 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.