தோழியுடன் தகாத உறவில் இருந்த தாய் ; பச்சிளம் குழந்தைக்கு அரங்கேற்றிய கொடூரம்
தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை கைது செய்துள்ளதுடன் குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே தம்பதிக்கு 5 மாதத்தில் துருவன் என்ற ஆண் குழந்தை இருந்தது.

தவறான உறவு
குழந்தையின் தாய் குளிப்பாட்டுவதற்காக தூக்கிய போது, குழந்தை பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளது. வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் பரிசோதித்து, குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் சுரேஷ் மனைவி பாரதியின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில், இறந்த குழந்தையின் புகைப்படம், அதேபகுதியை சேர்ந்த சுமித்ரா என்பவருக்கு பகிரப்பட்டதை கண்டு தனது குழந்தையின் சாவில் சந்தேகம் உள்ளதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டதுடன் விசாரணைகளின் போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
குழந்தையின் தாய் பாரதிக்கும், அவரது தோழி சுமித்ராவுக்கும் இடையே தவறான உறவு இருந்துள்ளது. அதனை அறிந்த குடும்பத்தினர் கண்டித்ததால், தற்காலிகமாக கைவிட்ட நிலையில், மீண்டும் சுமித்ரா மற்றும் பாரதி ஆகியோருக்கிடையே நெருக்கம் அதிகரித்துள்ளது.
அப்போது, ‘முன்பு போல் என்னிடம் சரியாக பேசாதது ஏன்? என்னை விட குழந்தை, கணவன் முக்கியமாக போய் விட்டதா?’ எனக் கேட்டு சுமித்ரா அழுதுள்ளார். இதனால், பாரதி தனது குழந்தையை கொன்று விட்டு நாடகமாடியது பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். இதனிடையே, சுமித்ரா மற்றும் பாரதியை ஆகியோரை பிடித்து காப்பகத்தில் அடைத்துள்ளனர்.