மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்பு
நோர்வூட்டில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வூட்- சென்ஜோன் டிலரி தோட்ட கீழ் பிரிவில் இன்று (18) காலை இச் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
56 வயதுடைய குமரேசன் தனலெட்சுமி என்ற பெண்ணே கெசல்கமுவ ஓயாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
அத்தோடு உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நோர்வூட் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் கெசல்கமுவ ஓயாவிலிருந்து குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.