எட்டு குழந்தைகளின் தாயான பெண் மருமகனுடன் தலைமறைவு; அதிர்ச்சியில் கணவர்
இந்தியா உத்தரப்பிரதேசம் அச்சனேரா பகுதியில், எட்டு குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது மருமகனுடன் காணாமல் போனதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது, குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக மருமகன் வீட்டுக்கு வந்திருந்ததாகக் கூறப்படுகிறது. மதியம் நேரத்தில், மேஹந்தி என்று அழைக்கப்படும் இலை எடுக்க வேண்டும் என்று கூறி, வீட்டின் பின்புறம் உள்ள வயலுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு முன்பே மருமகனுடன் நெருக்கம்
சில நேரம் கழித்து அவர்கள் திரும்பாததால், குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். பின்னர் இருவரும் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றது தெரியவந்தது.
அதேவேளை சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போதும் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பின்னர் குடும்பத்தினர் தேடி கண்டுபிடித்து மீண்டும் வீட்டிற்கு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
குடும்ப மரியாதைக்காக அந்த விஷயம் அப்போது அமைதியாக முடிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் இரு குடும்பங்களையும் மனஅழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. மனைவி மருமகனுடன் ஓட்டம் பிடித்ததால் எட்டு குழந்தைகளின் தந்தையான கணவர் அதிர்ச்சியில் உள்ளார்.
மேலும், ஐந்து குழந்தைகளின் தாயான மருமகனின் மனைவியும் மிகுந்த துயரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்தில் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன. இந்த நிலையில், பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மனுவின் அடிப்படையில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.