காணாமலாக்கப்பட்ட மூவரை காணாமலே உயிரைவிட்ட தாயார்; தமிழர் பகுதியில் பெரும் சோகம்
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகியோரை தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று இரவு மஉயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வவுனியா கிறிஸ்தவகுளம் பகுதியை சேர்ந்த செல்லையா செல்வராணி (வயது 75) என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவரது மகன்- தங்கராசா தயாபரன் (வயது 41) , மருமகன்- தம்பு தியாகராசா (வயது 56), பேரன்- தியாகராசா மனோகரன் (வயது 31) ஆகிய மூவரும், கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியா செட்டிகுளத்தில் விறகுவெட்ட சென்ற போது இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவர்களைத்தேடி வவுனியாவில் கடந்த 1898 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்து கொண்டு போராடியிருந்த நிலையில் மூவரையும் காணாமலேயே அவர் நேற்று உயிரிழந்துள்ளார் .

