தாயின் தகாத உறவால் பாடசாலை சிறுமி அனுபவித்த துயரம்!
பதுளை வெலிமடையில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவர், தனது சகோதரன் உள்ளிட்ட மூவரால் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் வெலிமடை, போகஹகும்புர பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவல்கள் ,

தாய் நபர் ஒருவருடன் தொடர்பு
சிறுமியின் தாய் புத்தளம், மதுரங்குளியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். கணவருடன் வசித்து வந்த போதிலும், அடிக்கடி மதுரங்குளிக்குத் தனது மகளையும் அழைத்துச் சென்று அந்த நபரைச் சந்திப்பதை தாய் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு தனது தாயுடன் மதுரங்குளிக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள இரு இளைஞர்களால் அந்தச் சிறுமி முதன்முதலில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பாதிக்கப்பட்ட சிறுமியின் 21 வயதுடைய சொந்தச் சகோதரனே அவரைத் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வெலிமடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை, பதுளை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார மற்றும் பண்டாரவளை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜி. பெரேரா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், போகஹகும்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தலைமைப் பொலிஸ் பரிசோதகர் (CI) ரி.ஆர்.என்.ஆர். பண்டார தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.