மகளின் கரங்களில் தாய்க்கு தூக்கு தண்டனை
ஈரானில் ஒரு மகள் தவறாக வழிநடத்தப்பட்டதன் காரணமாக தன் தாயை தூக்கிலிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளதோடு அதனை செய்வதற்கு ஈரானின் சட்ட விதிகளின் உதவி நாடப்பட்டது மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
ஈரானில் ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டம் உள்ளது. அதில் இறந்தவரின் உறவினருக்கு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உரிமை உண்டு. இந்தச் சட்டத்தின் விதிகளை பயன்படுத்தி, மகளின் கையால் தாய்க்கு மரண தண்டனை வழங்க முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டு. பின்னர் மகளின் கையினாலேயே தாய் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக அவரது மகள் தண்டனை கொடுக்கும் இடத்திற்கு அழைத்து வரவழைக்கப்பட்டு தாயின் காலடியில் போடப்பட்டிருந்த நாற்காலியை மகள் எட்டி உதைத்து மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளாள்.
பெண் தூக்கிலிடப்பட்ட காரணம்
மரண தண்டனை பெற்ற பெண்ணின் பெயர் மரியம் கரிமி. கணவரைக் கொன்ற வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பெண்ணின் தந்தை இப்ராகிம் தனது மருமகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தீர்க்க பலமுறை முயன்றும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. மரியத்த்தை அவரது கணவர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இப்ராகிம் தனது மருமகனை கொன்றதாகவும்கூறப்படுகிறது. இந்த வழக்கில் தந்தையுடன், மரியமும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பின்னர் சம்பவத்திற்குப் பிறகு பொலிஸார் மரியம் மற்றும் அவரது தந்தை இப்ராகிமை கைது செய்தனர். மரியத்தின் 6 வயது சிறுமியை அவரது தாத்தா பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமிக்கு அவரது தாத்தா பாட்டி, அவரது பெற்றோர் உயிருடன் இல்லை என்றும், அவள் ஒரு அனாதை என்று கூறப்பட்டது.
சமீபத்தில் சிறுமிக்கு 19 வயதான நிலையில் அவரது தாய்வழி தாத்தாவும், தாயும் சேர்ந்து தந்தையைக் கொன்றதாகக் கூறப்பட்டது. இறந்தவரின் நெருங்கிய உறவினர்களாக சிறுமி இருந்த நிலையில் மகளின் கரங்களிலேயே மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் காட்டுமிராண்டித்தனமான சட்டம்
ஈரானில், பழிக்கு பழி வாங்கும் சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் பெயர் "கிசாஸ் சட்டம்". இங்கு இறந்தவரின் உறவினர்கள் கையினாலேயே, குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து குறிப்பிட்டுள்ளது. இதில் குற்றவாளிகளுக்கு உறவினர்கள் மரண தண்டனை வழங்கலாம். இது தவிர, அவர்கள் மரணத்திற்கு ஈடாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.