ஓடும் பேருந்தில் இரு குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த தாய்!
ஓடும் பேருந்தில் தனது இரு குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனுடன் தாய் ஓட்டமெடுத்த சம்பவம் ஒன்று இந்தியாவில் அரங்கேறியுள்ளது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளதாவது,
இந்தியா மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த பெண். கடந்த ஞாயிற்றுக்கிழமை துல்ஜாபூரில் இருந்து சம்பாஜிநகர் நோக்கிச் சென்ற அரசு பஸ்ஸில் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் ஏறினார்.

குழந்தைகளின் சட்டைப்பையில் ஒரு சிறிய துண்டு
பஸ் பாதி தூரம் சென்றுகொண்டிருந்தபோது, அந்தப் பெண் குழந்தைகளை பேருந்திலேயே விட்டுவிட்டு கீழே இறங்கிவிட்டார். நீண்ட நேரமாக தாயை காணாமல் பஸ்ஸில் இருந்த அந்த இரண்டு குழந்தைகளும் பயந்து கதறி அழ ஆரம்பித்தன குழந்தைகளின் அழுகையைப் பார்த்த கண்டக்டர் அவர்களிடம் விசாரித்தார்.
அப்போது குழந்தைகளின் சட்டைப்பையில் ஒரு சிறிய துண்டு பேப்பர் இருப்பது தெரியவந்தது. அதில்,
காதலனுடன் நான் என் விருப்பப்படி வாழச்செல்கிறேன்.. பிள்ளைகளை தாத்தாவிடம் ஒப்படைத்துவிடுங்கள் எனஅந்த தாய் குறிப்பிட்டிருந்தார் அத்துடன் குழந்தைகளின் தாத்தாவின் போன் நம்பரையும் எழுதி வைத்திருந்தார்
அதிர்ச்சியடைந்த கண்டக்டர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.. விரைந்து வந்த போலீசார் பஸ்ஸில் குழந்தைகளை கைவிட்ட தாய் வழக்கில் குழந்தைகளை மீட்டு, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்தனர்.
துண்டுச்சீட்டில் பெயர் துண்டுச்சீட்டில் இருந்த போன் நம்பரை வைத்து போலீசார் குழந்தைகளின் தாத்தாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர்.
அவர் வந்து பேரக்குழந்தைகளை கண்டு கண்ணீர் விடுவார் என்று நினைத்தால், "என் மகள் வீட்டில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டாள்" என புலம்பி கொண்டிருந்தார்
இந்நிலையில் கள்ளக்காதலனுடன் ஓடிய அந்தப் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றதாக கூறப்படுகின்றது.