தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய் கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்பு
முல்லைத்தீவு விசுவமடு தேராவில் பகுதியில் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றிலிருந்து 52 வயதுடைய பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இந்த பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாயான இவர், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் மேலதிக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறப்பிற்கான காரணம் விபத்தா அல்லது வேறு காரணமா என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
பண்டிகைக் காலத்தில் இடம்பெற்றுள்ள இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.