தாயும், மகனும் சடலங்களாக மீட்பு!
மண்ணுக்குள் புதையுண்ட தாயும், மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கேகாலை, வரகாபொல பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களில் மேலும் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
24 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே, மீட்புக்குழுவால் இன்று மீட்கப்பட்டுள்ளது. வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றின்மீது பாரிய மண்மேடு நேற்று சரிந்து விழுந்தது.
மண்ணுக்குள் புதையுண்ட தந்தை, தாய் மற்றும் மகன்
தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோர் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் தந்தை நேற்று மாலை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் தாய் மற்றும் மகனின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டன.
அத்துடன், இக்குடும்பத்தின் இரண்டாவது மகன் மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து வெளியில் சென்ற வேளையிலேயே மண்சரிவு இடம்பெற்றதால், அவர் உயிர்தப்பியுள்ளார்.