தாயையும் மகளையும் தேடும் பணிகள் தீவிரம்!
பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் நீரிழல் மூழ்கியுள்ளனர்.
இந்நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் காணாமல் போயுள்ளனர்.
கண்டி பகுதியிலிருந்து நில்லம்பை நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு ஐவர் சென்றபோது திடீரென நீர்மட்டம் அதிகரித்ததால் ஐவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களால் மூவர் காப்பாற்றப்பட்டு சிகிச்சைக்காக கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஏனைய இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்தில் 19 வயது தாயும், அவரின் மகளுமே காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
