தாயையும் மகளையும் பலிகொண்ட கோர விபத்து; துயரில் உறவுகள்
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக ராஜங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹாரே மற்றும் அவரது மூத்த மகளான 32 வயதுடைய சஜினி மஹேஷிகா ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
உயிரிழந்த தாய் அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஒன்றின் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர் என்பதும், மகள் ஒரு பிள்ளையின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உயிரிழந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிரே வந்த முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் பலமாக மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் பின்னர் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே மகள் சஜினி உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த தாயார் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாய் சமுத்ரா அலுவிஹாரே, வியாழக்கிழமை (04) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.