மல்லாவி மருத்துவமனையில் இப்படி ஒரு அவலமா...கண்டு கொள்வார்களா அதிகாரிகள்!
முல்லைத்தீவு - மல்லாவி மருத்துவமனையில் பிணவறை செல்லும் மக்கள் பெரும் பாதிப்பை எதிகொள்வதாக கூறப்படுவதுடன், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்லது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு,துணுக்காய் ஆகிய இரு பிரதேச மக்களின் அரச சேவையான மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ளும் இடமாக மல்லாவி ஆதார மருத்துவமனை காணப்படுகின்றது .

கொண்டு கொள்வார்களா அதிகாரிகள்...
இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் பாதை புனரமைப்பு செய்யப்படாமையினால் தள மேடை பாதை இன்றி பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மல்லாவி ஆதார வைத்தியசாலையானது அதி கஸ்ட பிரதேச மக்களுக்கு சேவையாற்றும் ஒரு இடைநிலை ஆதார வைத்தியசாலையாகும் குறித்த பகுதிகளில் இடம்பெறும் அனர்த்தங்களின் போது உயிரிழப்புகள் ஏற்படின் மல்லாவி வைத்திய சாலையிலேயே உடலம் வைக்கப்படுவது வழமை ஆகும்.
இந்த நிலையில் நீண்ட ஆண்டுகாலமாக வைத்தியசாலையில் உள்ள பிரேத அறைக்கு செல்லும் வீதி தள மேடை பாதை புனரமைக்கப்படாமல் இருப்பதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் உடலங்களை தள்ளுவண்டிகள் மூலம் பிரேத அறைக்கு கொண்டு செல்லும் போது சீரற்ற தள மேடை பாதையினால் அரச பணியாளர்கள் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அசௌகரியங்களை எதிர் கொள்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மருத்துவமனையிலிருந்து 100M மீட்டார் தூரத்தில் உள்ள குறித்த பிரேத அறை உள்ள வீதியினை செப்பனிட மருத்துவமனை நிர்வாகமோ அல்லது நோயாளார் நலன்புரி சங்கமோ புனரமைப்பு செய்வதில் அக்கறை காட்டவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.