3500 க்கும் மேலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன! வெளியான அதிர்ச்சித் தகவல்
நாடளாவிய ரீதியில் உள்ள 7,000 பேக்கரிகளில் 3,500க்கும் அதிகமான பேக்கரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஜயவர்தன கூறினார்.
சமையல் எரிவாயு, பெற்றோல் மற்றும் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு மற்றும் சந்தை விலை உயர்வு காரணமாக எதிர்காலத்தில் 90 வீதமான பேக்கரிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக ஜயவர்தன மேலும் தெரிவித்தார். “எங்களுக்கு மூலப்பொருட்கள் பற்றாக்குறை, சமையல் எரிவாயு, டீசல் மற்றும் பெட்ரோல் பற்றாக்குறை.
எனவே இது தொடர்பில் ஆராய பிரதமரால் நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் சாகல காரியவசத்துடன் நேற்று முன்தினம் (30) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த சந்திப்பில் எங்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டினோம். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் எங்களின் பிரச்சனைகளை தெரிவித்து அவர்கள் மூலம் எங்களின் தேவைகளை நிறைவேற்றி தருவதாக கூறினார்.
இருப்பினும், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு நீடித்தால், எதிர்காலத்தில் பேக்கரி பொருட்களை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.