நாடு முழுவதும் 176,000க்கும் அதிகமானோர் கைது
முழு நாடுமே ஒன்றாக தேசிய விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 176,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (14) வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 176,269 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 1941 கிலோ 248 கிராம் ஹெரோயின், 2003 கிலோ 512 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 436 கிலோ 235 கிராம் குஷ் போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவர்களில் 325 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 2820 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கைதான , 2050 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.