டெங்கு பரவலால் மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு பூட்டு!
மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் வேகமாகப் பரவி வருவதை அடுத்து, மொரட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் திங்கட்கிழமை (06) நடத்தப்பட்ட விரிவான ஆலோசனைகளைத் தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தினுள் டெங்கு பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சிரமதான மற்றும் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, அண்மையில் பல மாணவர்களுக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கொழும்பு சௌந்தரிய கலைகள் பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.