சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரை விகாராதிபதிக்கு உயரிய விருது
யாழ்ப்பாணத்தில் சர்ச்சைக்குரிய தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரர் அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயகராக தெரிவாகியுள்ளார்.
சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள்
புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொள்ளவுள்ளார்.
தையிட்டி விகாரையானது சட்ட விரோதமானது எனவும், தனியார் காணிகளை குறித்த விகாராதிபதி அடாத்தாக கையகப்படுத்தி, விகாரையை அமைத்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில்,விகாரதிபதிக்கு வழங்கப்படும் கௌரவ நிகழ்வில் . அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளமை யாழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.