இலங்கையில் புத்தரின் பெயரால் தப்பிக்கொள்ளும் பிக்குகள்!
நாடளாவிய ரீதியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அனுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவத்தில் , சிறுமியை சீரழித்த பிக்குவை காப்பாற்றுவதற்கு தென்னிலங்கை அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிக்குகள் செயல் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சங்கள் முன்வைக்கப்படு வருகின்றது. அனுராதபுர சிறுமி துஷ்பிரயோக சம்பவம் சர்வதேச ஊடகங்களில் வெளியாகி இருந்தது

பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்தி
இந் நிலையில் பௌத்த மதத்தின் தூண்களாகக் கருதப்படும் பிக்குகள், பிக்குணிகள், உபாசகர்கள் மற்றும் உபாசிகைகள் ஆகியோரின் அடிப்படைகளைச் சிதைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
தேசிய பிக்குகள் ஒற்றுமை ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் எலபத்கம ஞானரத்தன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். பௌத்த கட்டமைப்பை சிதைத்து அதனை முற்றாக அழிப்பதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக, அண்மையில் தலைமை தேரர் தொடர்பான சம்பவத்தை மையப்படுத்தி, அரச சார்பற்ற நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிக்குகளுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விஹாரை மற்றும் தேவாலயங்கள் சட்டத்தின் கீழ் பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாடுகள் ஏற்கனவே உள்ள நிலையில், அவற்றை மீறி செயற்படுவது சாசனத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சங்க சொத்துக்கள் தொடர்பில் மாற்றங்கள் தேவைப்படின், முப்பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்று உரிய முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.