வயலொன்றில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்!
மொனராகலை - எத்திமலை பகுதியில் விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வயலொன்றில் வேலை செய்து கொண்டிருந்த போதே விவசாயி மின்னல் தாக்கி நேற்றையதினம் (03-07-2024) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் எத்திமலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடரிபில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த நபர் மேலும் 3 நபர்களுடன் இணைந்து வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போது கடும் மழை காரணமாக அருகில் இருந்த மரமொன்றிற்கு அடியில் நின்றுகொண்டிருந்த போது மின்னல் தாக்கி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, காயமடைந்தவர் எத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.