முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் மோடி; காங்கிரஸ் விமர்சனம்
இந்திய பிரதமர் மோடி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,
பிரதமர் மோடி தன்னை ஒரு அசாதாரணமான மனிதரைப் போல் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் முன்னாள் பிரதமராக மாறப்போகிறார் என்பதையே தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன. எனவே அவர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இன்று முடிவு வெளியாகவுள்ள நிலையில், பல இடங்களில் முன்னனியில் உள்ள பா.ஜ.க மீண்டும் மோடி தலையில் ஆட்சியமைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.